மனித வள மேம்பாட்டுப் பாடத் திட்டம்!

ஒரு முஸ்லிம் தனது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்துக்கான மனித வள மேம்பாட்டுப் பாடத்திட்டம் ஒன்றை நாம் வகுத்துள்ளோம். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இதில் பதினெட்டு தலைப்புகள் உள்ளன, அவை: 1. நம்பிக்கையில் உறுதி (Conviction in Faith) 2. பெரும் பாவங்களில் இருந்து விலகல் (Keep away from Major sins) 3. வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு (Worship with commitment) 4. ஒழுக்க மாண்புகள் (Core Values of Islam) 5. மனித உறவுகள் [...]

பயிலரங்கம்: உனக்குள் ஒரு சுரங்கம்!

இன்று உலகெங்கிலும் – கல்வியாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், இன்னும் பல சிந்தனையாளர்களாலும் அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையே – “மனித வள மேம்பாடு” என்பது (Human Resource Development). ஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்…..கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு [...]

“இவரே நல்லாசிரியர்!” பயிற்சி குறித்து ஆசிரியர்களின் கருத்துக்கள்

இவரே நல்லாசிரியர்! காரைக்கால் இக்ரா நர்ஸரி & பிரைமரி பள்ளியில் 26 – 02 – 2011 அன்று நடைபெற்ற “இவரே நல்லாசிரியர்” என்ற ஆசிரியர் பயிற்சி வகுப்பு குறித்து அதில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் கருத்துக்கள்: இந்த பயிற்சி வகுப்பு எனக்கு முதலில் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிய வைத்தது. பிறகு குழந்தைகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்வது என்பதையும் தெரிந்து கொண்டோம். – ஆசிரியை D.Akila [...]

ஆசாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கருத்துக்கள்

பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு மாணவிகளுக்காக, மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 – 03 – 2011 அன்று நடைபெற்ற, “கல்வியிலே சாதனை செய்!”  பயிற்சி முகாம் குறித்து அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள்: இந்த பயிற்சியின் மூலம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். தேர்வு பற்றி அதிக பயம் இருந்தது.இந்தப் பயிற்சிக்குப்பிறகு எனக்கு பயமில்லை. நான் அதிக மதிப்பெண் [...]

A.R.C. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கருத்து

மயிலாடுதுறை A.R.C. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் “தேர்வுகளில் சாதனை செய்” – சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலரின் கருத்துக்கள் இதோ: “இந்த நிகழ்ச்சி இந்நேரத்திலிருந்து என் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படும் என்று மிகவும் நம்புகிறேன். பொதுவாக நான் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்கி விடுவேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆற்றிய சொற்பொழிவுகளைக் கண்டு வியந்தேன். தூக்கம் வராமல் கவனமாகக் கேட்ட சொற்பொழிவு இது தான். [...]

Prev 1 2 3 4 5 Next

மனித வள மேம்பாட்டுப் பாடத் திட்டம்!

ஒரு முஸ்லிம் தனது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்துக்கான மனித வள மேம்பாட்டுப் பாடத்திட்டம் ஒன்றை நாம் வகுத்துள்ளோம். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இதில் பதினெட்டு தலைப்புகள் உள்ளன, அவை:

1. நம்பிக்கையில் உறுதி (Conviction in Faith)

2. பெரும் பாவங்களில் இருந்து விலகல் (Keep away from Major sins)

3. வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு (Worship with commitment)

4. ஒழுக்க மாண்புகள் (Core Values of Islam)

5. மனித உறவுகள் (Human Relations)

6. நற் பழக்கங்கள் (Etiquettes and Manners)

7. அறிவைத் தேடும் ஆர்வம் (Pursuit of Knowledge)

8. இறை நெருக்கம் (Closeness to Allah)

9. மனித வள மேம்பாடு (Human Resource Development)

10. உன்னை அறிவாய்! (Self Discovery)

11. தலைமைத்துவம் (Leadership)

12. கருத்துப் பரிமாறும் திறன் (Communication Skills)

13. உணர்ச்சித் திறன் (Emotional Wisdom)

14. இலட்சிய வாழ்வும் வெற்றியும் (Life Goal – Success)

15. திருமண வாழ்க்கை (Marital Life)

16. குழந்தை வளர்ப்பு (Islamic Parenting)

17. சமூகப் பொறுப்பு (Social Responsibility)

18. உன் பங்களிப்பு (Legacy and Contribution)

 

பயிலரங்கம்: உனக்குள் ஒரு சுரங்கம்!

இன்று உலகெங்கிலும் – கல்வியாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், இன்னும் பல சிந்தனையாளர்களாலும் அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையே – “மனித வள மேம்பாடு” என்பது (Human Resource Development).

ஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்…..கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு இந்தத் துறை பெரிதும் உதவி செய்கிறது.

மனித வளங்கள் பல வகைப்படும். அறிவு வளம், மன வளம், உடல் வளம், ஆன்மிக வளம், ஒழுக்கம் சார்ந்த வளம் – ஆகிய இந்த ஐந்து விதமான வளங்களையும் கண்டுணர்ந்து அவைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமே மனிதர்கள் வாழ்வில் முழு வெற்றி பெற முடியும்.

இந்த அடிப்படையில் உருவாக்கப் பட்ட பயிற்சியே “உனக்குள் ஒரு சுரங்கம்!”

இனிய தமிழில், சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் நவீனமான முறையில் இப்பயிற்சி நடத்தப்படும்.

இப்பயிற்சி முகாமை வடிவமைத்து நடத்துபவர்: S. A. மன்சூர் அலி, மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

“இவரே நல்லாசிரியர்!” பயிற்சி குறித்து ஆசிரியர்களின் கருத்துக்கள்

இவரே நல்லாசிரியர்!

காரைக்கால் இக்ரா நர்ஸரி & பிரைமரி பள்ளியில் 26 – 02 – 2011 அன்று நடைபெற்ற “இவரே நல்லாசிரியர்” என்ற ஆசிரியர் பயிற்சி வகுப்பு குறித்து அதில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் கருத்துக்கள்:

இந்த பயிற்சி வகுப்பு எனக்கு முதலில் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிய வைத்தது. பிறகு குழந்தைகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்வது என்பதையும் தெரிந்து கொண்டோம். – ஆசிரியை D.Akila

இந்த பயிற்சி வகுப்பின் மூலம், எவ்வாறு குழந்தைகளின் திறமையை பிரித்தறிந்து அதற்கேற்ப ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அன்பின் மூலம் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.– ஆசிரியை K. Kalpana

அல்ஹம்து லில்லாஹ்! உங்கள் பயிற்சி மிகவும் எனக்கு பயன் தந்தது. இதன் மூலம் தெரியாத பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். மாணவர்களிடம் அணுகும் முறையை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். – ஆசிரியை J. Sumaiya

மாணவர்களை அன்பாக திருத்தும் வழி முறைகளை அறிந்து கொண்டேன். – ஆசிரியை V. Uma Maheshvari

இந்த வகுப்பு ஓர் சிறந்த வகுப்பினையும், கற்பித்தலையும் மேற்கொள்வது எப்படி என்ற ஆழமான அனுபவத்தைக் கொடுத்தது. வகுப்பறையில் பிரச்னைக்குரிய குழந்தையைக் கையாள்வது குறித்த அனுபவம் கிடைத்தது. – ஆசிரியை J. Jaya Supriya

இந்த பயிற்சி வகுப்பு மூலமாக நான் யார் என்று என்னையே சிந்திக்க வைத்தது. (இதனை) எனக்கு மட்டுமல்லாமல் என்னுடைய மாணவர்களுக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் பயன் படுத்துவேன். – ஆசிரியை M. Sumathi

இது போன்ற பயிற்சியை கடைப்பிடித்தால் ஒரு மாணவனின் திறமையை வெளிக் கொணர்ந்து அவனை நற்பண்பு உள்ளவனாக மாற்றவும், அவனை சமுதாயத்திற்கு பயன் படும் வகையில் உருவாக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்ற நம்பிக்கை எங்களிடம் உருவாகியுள்ளது. வகுப்பில் இதுவரை சந்தித்த பிரச்னைகள் எல்லாவற்றையும் களைந்திட எங்களிடம் நம்பிக்கை உருவாகியுள்ளது. – ஆசிரியை J. Sharmila Banu

இந்த வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வகுப்பு என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது. எப்படி குழந்தைகளின் (தனித்திறமைகளைக்) கண்டு பிடித்து அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிப்பது என்பதை அறிந்து கற்பிக்க எனக்கு இந்த வகுப்பு பயன்படும். – C. Sowthanya

சொன்ன கருத்துக்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. அடித்தால் தான் பிள்ளைகள் படிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அடிக்காமல் அவர்களிடம் அன்பாக பேசியும் திருத்தலாம், படிக்க வைக்கலாம் என்று சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. – ஆசிரியை M. Seyed Sulthan Beevi

நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆசிரியர்கள்
எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாது என்பது நன்றாக புரிந்தது. நல்ல ஆசிரியராக எப்படி விளங்க வேண்டும் என்பதை நன்றாக எடுத்துரைத்தீர்கள். வகுப்புகள் ஆர்வத்துடன் செல்ல வழிகளையும் கூறினீர்கள். ஆசிரியராக நான் இனி மேல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்தேன். மிக்க நன்றி. – G. Pravina

இந்த பயிற்சி எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்க மற்றும் சிறந்த மாணவர்களை உருவாக்க (இப்பயிற்சி வகுப்பு) பயன் படும். மாணவர்கள் தானே விரும்பி ஏற்கும் ஆசிரியராக இனி நான் இருப்பேன். – N. Girija

இந்த பயிற்சி வகுப்பு நமக்கு ஆர்வமூட்டுவதாய் உள்ளது. நாம் செய்யக் கூடிய தவறுகள்,
அணுக வேண்டிய முறைகள், நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள பெரிதும் உதவுகிறது. மாஷா அல்லாஹ்! குழந்தைகளின் மன நிலைக்கேற்ற படி நடந்து கொள்ள இந்த பயிற்சி பயன் படும் இன்ஷா அல்லாஹ்! – M. Sithi Safina

பயிற்சி அளித்தவர்:  S. A. Mansoor Ali, Facilitator in Human Resource Development

###

The following is the selected FEEDBACK statements of one of the teaching staff on Effective Teaching Programme conducted by S. A. Mansoor Ali on 19 – 03 – 2011 at Ideal Nursery and Primary School, Mayiladuthurai.

“It was an awesome workshop Sir. Really I got a lot of knowledge about how we can understand the ability of each child in our class, and how we should enhance each and every quality of the child in the best way. Really I feel enriched now with lot of things you have taught us today sir, while you were explaining the types of intelligence. I had all my students categorized into each intelligence in mind. Thank you sir, for making me understand my kids (my students) better than before.

Definitely I am going to apply this in my class room because this is what I always wanted, an “EYE-OPENER’, I always want to learn new things so that I can apply that for my class and make my students complete with knowledge.  Today I am very happy that I got such a good view about students from you, that I am going to apply on my students of IV STD. Definitely I am going to implement group discussion in my class about the lessons they have learned.” – H. Meenakshi Jain, BCA, PGDCA

ஆசாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கருத்துக்கள்

பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு மாணவிகளுக்காக, மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 – 03 – 2011 அன்று நடைபெற்ற, “கல்வியிலே சாதனை செய்!”  பயிற்சி முகாம் குறித்து அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள்:

இந்த பயிற்சியின் மூலம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். தேர்வு பற்றி அதிக பயம் இருந்தது.இந்தப் பயிற்சிக்குப்பிறகு எனக்கு பயமில்லை. நான் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்து விட்டது. எஸ். தவ்லதுன் நூரானியா

இந்த பயிற்சி முகாம் எனக்கு பொதுத் தேர்வு மீதிருந்த பயத்தை போக்கியது. இந்த வகுப்பு மூலம் நான் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்பு கல்விக்கு மட்டும் பயன்படாமல் வாழ்க்கைக்கும் பயன் படுவதாக இருக்கிறது. – எம். யாசிகா நஸ்ரின்

எங்களுடைய கேள்விகளுக்கு பதில் தந்து எங்கள் பயத்தை தீர்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் எளிதில் மதிப்பெண்கள் எடுக்கவும் மிகவும் பயனாய் இருந்தது. – ஜே. ஸம்ஸம் ஃபமீதா

இந்த பயிற்சி எங்களுக்கு மிக அருமையாக இருந்தது. இவ்வளவு நாளாக எனக்கு பயமாகவே இருந்தது – நாள் நெருங்க நெருங்க. ஆனால் நீங்கள் சொன்ன கருத்துகளை கேட்டதும் அந்த பயம் போய் விட்டது. நாங்களும் நல்ல மார்க் எடுத்துக் காட்டுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. – எம். முர்ஷிதா

நாங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக இந்த பயிற்சி மிக அவசியமாக இருந்தது. இதில் எங்கள் வாழ்க்கையைப் பற்றியும் எங்கள் வாழ்க்கையின் முன்னேற்றங்களைப் பற்றியும் நீங்கள் கூறியது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. – எம். முஃக்ஃபிலா சஃப்ரின்

இது மிகவும் எங்களுக்கு உதவியாய் உள்ளது. இந்த பயிற்சி எங்களுக்கு மிகவும் படிக்கும் ஆர்வத்தை கொடுத்துள்ளது. மிக மதிப்பெண் எடுக்க எங்களுக்கு மிக எளிமையான வழியாய் உள்ளது. இது எங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. – ஏ. எஸ். ஷீஃகானாஸ் பானு

இந்த பயிற்சி எங்களுக்கு படிப்பில் மிக கவனம் செலுத்தி மிக அதிகமாக படிக்க பயன்படும். இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகிறது. இது எங்களுக்கு மிக அவசியமாக உள்ளது. – எம். அமீர் ஃபர்வின்

இந்த மாதிரியான பயிற்சி மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். இந்த பயிற்சியை அனைத்து பள்ளிக் கூடங்களிலும் நடத்தினால், மாணவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும். – எஸ். மர்வா சஃப்ரின்

இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்படி பொதுத்தேர்வில் மார்க் வாங்குவது என்று பயந்து கொண்டிருந்தேன். இப்பயிற்சி மூலம் நான் அதிக மதிப்பெண் பெறுவேன். இன்ஷா அல்லாஹ்! நான் 450 க்கு மேல் இந்த பயிற்சியின் மூலம் வாங்குவேன். இந்த பயிற்சி என் கல்விக்கு மட்டுமில்லாமல் என் வாழ்க்கைக்கும் பயன்படும். இன்று முதல் நான் என் குறிக்கோளை (Goal) அடைய முயற்சி செய்வேன். எனக்கு அதிக கோபம் வரும்., upset ஆவேன். அதிலிருந்து விடுபட இப்பயிற்சி மிக மிக பயன்படும். – எஸ். மினாஸ் ஃபர்வின்

இந்த பயிற்சி மிகவும் நன்றாக இருந்தது. எங்களுக்கு இந்த நிகழ்ச்சியிலிருந்து நிறைய கருத்துக்கள், அறிவுரைகள் கற்றுக் கொண்டோம்.  இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒரு ஆர்வமும், புத்துணர்ச்சியும் அடைந்தோம். இந்நாள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. – எம். ஹாஜிரா

நான் நினைத்ததை விட அதிகமாக கற்றுக் கொண்டேன். இது என் எதிர்காலத்தை தேர்வு செய்யவும் பயன்பட்டது. இதன் மூலம் என்னுடைய பலவீனம் தெரிந்து கொண்டேன். என்னுடைய நேரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். இன்னும் நான் உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன். – எஃப். நூருல் ஃபாஜிலா

இந்த பயிற்சி எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு இது வரை தெரியாதது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இது வரை நான் மிகவும் பயந்தேன். இப்போது பயமே இல்லை. நான் எழுதும் தேர்விலும், வாழ்க்கையிலும் இன்ஷா அல்லஹ் வெற்றி பெறுவேன். இந்த ஒரு நாள் எனது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. – அமீரா பானு. ஏ

இந்த பயிற்சியினால் எப்படி தேர்வு எழுதுவது, எப்படி நினைவு படுத்துவது, எவ்வளவு நேரம் படிப்பது என்பதைப் பற்றி தெளிவாய் தெரிந்துக் கொண்டோம். தேர்வைப் பற்றிய பயமும், பதற்றமும் குறைந்துள்ளது. நம்பிக்கை அதிகரித்துள்ளது.. – எம். ஆர். ஜஸிமா பேகம்

இந்த பயிற்சி எங்களை நிறைய படிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுகிறது. இந்த பயிற்சி வகுப்பு இந்த வருடம் மட்டுமல்ல. இனி நாங்கள் படிக்கும் எல்லா ஆண்டுகளுக்கும் உதவியாக இருக்கும். – ஏ. ஆர். சமீமா ஃபர்வின்

இந்த பயிற்சி வகுப்பு என் பள்ளி வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல் என் எதிர்கால வாழ்க்கைக்கும் பயன்படும். இந்த பயிற்சி வகுப்பில் கிடைத்த பலனை நான் வாழ்க்கையிலும் பயன்படுத்துவேன். – ஏ. நஸ்ரின் பானு

A.R.C. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கருத்து

மயிலாடுதுறை A.R.C. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் “தேர்வுகளில் சாதனை செய்” – சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலரின் கருத்துக்கள் இதோ:

“இந்த நிகழ்ச்சி இந்நேரத்திலிருந்து என் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படும் என்று மிகவும் நம்புகிறேன். பொதுவாக நான் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது தூங்கி விடுவேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆற்றிய சொற்பொழிவுகளைக் கண்டு வியந்தேன். தூக்கம் வராமல் கவனமாகக் கேட்ட சொற்பொழிவு இது தான். அவர் கூறிய ஒவ்வொரு கருத்தும், அறிவுரையும் மதிப்பிட முடியாதவை. அவர் ஆற்றிய சொற்பொழிவினால் தான் என்னுடைய குறைகளையும், நிறைகளையும் கண்டு பிடிக்க முடிந்தது. என்னைப் போன்று எல்லா மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.” – J. ஹரி பிரசாந்த்

“நீங்கள் நடத்திய இந்த வகுப்பு ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருந்தது. நீங்கள் கூறிய அந்த நேரம் வைத்து படிக்கும் முறை மிகவும் பயன்பாடாக இருந்தது. நீங்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் இன்னும் பல பள்ளிகளுக்குச் சென்று இம்முக்கியமான பயன்பாடான செய்திகளைக் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” – S. Marathi Raj Kumar

“இந்த நிகழ்ச்சி எனக்கு படிப்பதற்கு ஊக்கம் அளித்தது. எப்படி படிப்பது, எந்த நேரத்தில் படிப்பது என்பதை புரிந்து கொள்ள உதவியது. தயவு செய்து இந்த நிகழ்ச்சியை எல்லா பல்ளியிலும் சொல்லி தர வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”. – R.E. Senthil

“நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு கண்டிப்பாக உபயோகமாக இருக்கும். நீங்கள் சொன்னது அனைத்தையும் என் நடைமுறை வாழ்க்கையில் செயல் படுத்தி நான் வெற்றி பெறுவேன். நீங்கள் நடத்திய நிகழ்ச்சியின் மூலமாக நீண்ட காலமாக இருந்த சந்தேகம் தெளிவு பெற்றது”. – R.S. Gayathri

“மூன்று மணி நேரம் “memory class” என்று சொன்னார்கள். கேட்ட உடன் எப்படி உட்காரப் போகிறோம் என்று நினைத்தோம். ஆனால் மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் போல் ஆகி விட்டது. Goal பற்றி மிக அழகாகச் சொன்னீர்கள். என்னுடைய Goal – ஐ நான் achieve பண்ணுவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது”. – M. Dhivya

“இன்று நடந்த நிகழ்ச்சி எனக்கு வாழ்க்கையில் திருப்பத்தைத் தரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல தகவல்களை அறிந்து கொண்டேன். இந்த அளவிற்கு சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நீங்கள் கூறிய கருத்தும் கதையும் மாற்றத்தை ஏற்படுத்தியது”. – G. Ramya

“உங்களின் இந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் சொல்ல வந்த கருத்துக்களை கதைகள் மூலம் கூறி எங்களுக்கு எளிதில் புரிய வைத்தீர்கள். எங்களுக்கு அதிகமான தேர்வு பயத்தைப் போக்குவது எப்படி என்று கூறினீர்கள்.” – S. Senthil Kumar

“என் குறைகளை நான் தெரிந்து கொள்ள நீங்கள் உதவியிருக்கிறீர்கள். அதை நான் சரி செய்வதற்கு நீங்கள் உதவியிருக்கிறீர்கள். நன்றி.” – ஒரு மாணவர்.

இது ஒரு நல்ல experience. என்னுடைய ப்ளஸ் 2 வாழ்க்கையில் இது ஒரு பெரிய gift. – P. மனோஹரி

Page 1 of 23123456»1020...Last »